திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி..!! ஆர்.எஸ்.பாரதி போட்ட புது குண்டு..!! பேரதிர்ச்சியில் சீமான் தம்பிகள்..!!
சட்டப்படி நாம் தமிழா் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று ஆர்.எஸ்.பாரதி சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஜோதிபுரம் மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞா்களின் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.பாரதி, ”மகளிருக்கு எண்ணற்ற திட்டங்களை முதல்வா் கொண்டு வந்துள்ளாா். எம்.ஜி.ஆருக்கு மக்கள் வந்தது போல், இப்போது மு.க ஸ்டாலினுக்கும் கூட்டம் அதிகமாக வருகிறது” என்றார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், ”நாம் தமிழா் கட்சியை நடத்தி வந்த சி.பா.ஆதித்தனார், 1969ஆம் ஆண்டு திமுகவில் இணைத்துவிட்டாா். கட்சி கலைக்கப்பட்டுவிட்டது. எனவே, சட்டப்படி நாம் தமிழா் என்ற பெயரில் சீமான் கட்சி நடத்தக் கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்தப் பெயரையே இனி பயன்படுத்த முடியாது. சீமான் தனது படத்துடன் பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து தமிழக இளைஞா்களை ஏமாற்றி வருகிறாா்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “பரந்தூா் விமான நிலைய திட்டத்திற்கு இடம் வழங்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய விவகாரத்தில் முழுமையாக விசாரிக்காமல் விஜய் பேசி வருகிறார். பரந்தூர் பகுதி வாக்குச்சாவடியில் அனைத்துக் கட்சிகளையும்விட திமுகவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன” என்றார்.
Read More : ”உங்களை நான் கூட்டிட்டு போறேன்”..!! நைசாக பேசி பெண்ணை அழைத்துச் சென்று குடோனில் வைத்து கூட்டு பலாத்காரம்..!!