”நாங்க CBI-ல இருந்து பேசுறோம்”..!! உஷாரய்யா உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் கால் வந்தா எடுக்காதீங்க..!!
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தாலும், தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் தற்போது, சர்வதேச எண்களை பயன்படுத்தி மோசடியாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர். 67 மற்றும் 670 போன்ற சர்வதேச எண்களைப் போலவே காண்பிக்கும் நம்பரில் இருந்து அழைப்புகள் வருகின்றன. எனவே, இதுபோன்ற அழைப்புகள் உங்களுக்கு வந்தால் உஷாராக இருக்க வேண்டும்.
மோசடிக்காரர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் (TRAI) இருந்து பேசுவதாக உங்களிடம் கூறுவார்கள். பிறகு ஒரு நபரை ஏமாற்றி அவருடைய நம்பர் பண மோசடிக்கு பயன்பட்டதாக கூறுகின்றனர். இதைக் கேட்கும் நபர்களும் செய்யாத குற்றத்திற்கு சிக்கிக் கொள்கின்றனர். அப்படி மக்களை ஏமாற்றி ஒரு நாள் முழுவதும் டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி ஒரு தனி அறையில் வைத்து நடக்கும் விஷயங்கள் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்று பணத்தை அனுப்புமாறு மிரட்டுவார்கள்.
இந்த மாதிரி மோசடியால், மக்கள் பல லட்சம் ரூபாய்களை இழந்துள்ளனர். இன்னும் சில நேரங்களில் மோசடியை உண்மையானது போல காண்பிக்க சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு பேசுவார்கள். தற்போது படித்த நபர்களையும் இதுபோன்ற மோசடிக்காரர்கள் ஏமாற்றி வருகின்றனர். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைமில் புகாரளிக்கின்றனர்.
தப்பிப்பது எப்படி..? தெரியாத நம்பரில் இருந்து அழைப்புகள் வந்தாலோ அல்லது சர்வதேச எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தாலோ பதில் அளிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். சிபிஐ அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு உங்களுக்கு யாரேனும் தொடர்பு கொண்டால், அவர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். ஏனென்றால், எந்த ஒரு அரசாங்க அதிகாரிகளும் உங்களை நேரடியாக தொடர்பு கொண்டு விவரங்களை கேட்க மாட்டார்கள். எனவே, இதுபோன்றே மோசடிக்கு பலியாவதை தடுக்க எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர்.
Read More : அடடே..!! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி..!! Typist பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?