முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இரு நாடுகள் ஆட்சி செய்யும் உலகின் தனித்துவமான தீவு..!! எங்கே இருக்கு தெரியுமா?

We are going to learn about Pheasant Island, located between France and Spain. These two countries alternate ruling Pheasant Island every 6 months.
10:56 AM Jul 21, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ள ஃபெசன்ட் தீவை பற்றிதான் நாம் தெரிந்துக்கொள்ள போகிறோம். இவ்விரு நாடுகள் தான் ஃபெசன்ட் தீவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மாறி மாறி ஆட்சி செய்கின்றன.

Advertisement

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இடையே அமைந்துள்ளது ஃபெசன்ட் தீவு. 200 மீட்டர் நீளமும் சுமார் 40 மீட்டர் அகலமும் கொண்ட இந்த தீவு ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. இருநாடுகளுக்கிடையே அமைந்துள்ள இந்தத் தீவை, யார் ஆட்சி செய்வது என்று பல நூற்றாண்டுகளாக குழப்பத்தில் இருந்து வந்துள்ளது. அதன் பிறகு பிரான்சும் ஸ்பெயினும் இந்த தீவு தொடர்பாக பரஸ்பர சம்மதத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இவ்விரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் படி 1,659 ஆம் ஆண்டு, ஃபெசன்ட் தீவு தொடர்பாக பைன்ஸ் என்று அழைக்கப்படும் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, 6 மாதங்கள் பிரான்ஸும் அடுத்த 6 மாதங்கள் ஸ்பெயின் நாடும் ஆட்சி செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்வென்றால், இந்த தீவு தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே இதுவரை போர் நடந்ததில்லை என்பது தான். பிரான்சும் ஸ்பெயினும் இந்த தீவை 6 மாதங்களுக்கு ஒருமுறை மிகவும் அமைதியான முறையில் ஆட்சி செய்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபுறம் உலக நாடுகளான ரஷ்யா, உக்ரைன், இந்தியா-சீனா என எல்லா இடங்களிலும் எல்லை பகுதியில் போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், எவ்வித போர் நடக்காமல் அமைதியாக முறையில் இருநாடுகள் ஒரு தீவை ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஆட்சி செய்துவருவது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more ; ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை பரப்பும் சீனா!. பயங்கரவாதிகளுக்கு முழு ஆதரவு!. திடுக்கிடும் தகவல்!

Tags :
FrancePheasant Islandspainunique island
Advertisement
Next Article