இவர்கள் எல்லாம் தண்ணீர் அதிகம் குடிக்க கூடாது... மீறினால் வரும் பேராபத்து!!
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவை எத்தனை முக்கியமோ அதி விட முக்கியம் தண்ணீர். ஆம், உணவு இல்லாமல் உயிர் வாழ முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் வாழவே முடியாது. எலும்புகள், தசைகள் என அனைத்து உறுப்பிலும் தண்ணீர் உள்ளது. அந்த வகையில், ஒரு மனிதனின் உடலில் 70% நீர் தான் உள்ளது. இதனால் தான் எல்லா மருத்துவர்களும் நன்கு தண்ணீர் குடிங்கள் என்று கூறுவது உண்டு. இதனால் பலர் அதிக அளவு தண்ணீரை குடித்து வந்தனர். ஆனால், சமீப காலத்தில் அதிக தண்ணீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை பலரின் மத்தியில் இருந்தது. ஆனால் அது உண்மையா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
பொதுவாக, அதிக அளவு கலோரிகள் எடுத்துக் கொண்டால் தான், உடல் எடை அதிகரிக்கும். இதுதவிர, கொழுப்புகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் தண்ணீரில் எந்த கலோரியும் இல்லை. இதனால் தண்ணீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்று நீங்கள் பயப்பட வேண்டாம். ஆனால், சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிக்க கூடாது. ஏனெனில் அவர்களின் சிறுநீரகங்களால் அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற முடியாது. இதனால், ரத்தத்தில் உள்ள சோடியம் உள்ளடக்கம் நீர்த்து போகும். இது உயிருக்கு ஆபத்தான நிலையான ஹைபோநெட்ரீமியாவுக்கு வழிவகுக்கிறது.
இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறும்போது, ஆண்கள் ஒரு நாளைக்கு சுமார் 15.5 கப் (3.7 லிட்டர்) தண்ணீரும், பெண்கள் சுமார் 11.5 கப் (2.7 லிட்டர்) தண்ணீரையும் குடிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்.
Read more: டீ குடித்து உடல் எடையை குறைக்கலாம்… எப்படி தெரியுமா??