தூங்கும் போது அடிக்கடி கால் நரம்பு இழுக்கிறதா? கட்டாயம் இதை படியுங்கள்..
பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை, தூங்கும் போது கால் நரம்பு அடிக்கடி இழுத்துக் கொள்ளும். தூங்கும்போது மட்டும் இல்லாமல் நீண்ட நேரம் உட்கார்ந்தாலோ அல்லது நிற்கும்போதோ கால் தசைகளில் ஒரு விதமான அழுத்தம் உண்டாகி அவ்வப்போது மரத்துப் போகும். இவ்வாறு ஏற்படும் தசை பதற்றம் பொதுவாக தானாகவே சரியாகும். ஆனால் ஒரு சில நேரங்களில், உணர்வின்மை நீங்கினாலும் வலி நீடிக்கும். இப்படி தசைப்பிடிப்புக்குப் முக்கிய காரணம் உடலில் ஏற்படும் நீர் பற்றாக்குறை. இரவில் பக்கவாட்டில் படுக்கும்போதோ, நடக்கும்போதோ அல்லது தசையில் வலி மற்றும் தசைகளில் லாக்டிக் அமிலம் குவிதல் அல்லது வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் இல்லாததால் அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
தசைப்பிடிப்புக்குப் பிறகு உடனடியாக, ஐஸ் கட்டியை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். இல்லையென்றால், அந்த இடத்தில் நன்கு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யுங்கள். மேலும், ஒரு டவலை வெந்நீரில் நனைத்து நன்றாக பிழிந்து, அதை வலி உள்ள இடத்தில் வைத்து பிடித்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி, தசை பதற்றம் நீங்கும். இப்படி உங்களுக்கு அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால், கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். நீங்கள் தூங்கும் போது உங்கள் காலடியில் தலையணை ஒன்றை வைத்துக் தூங்கலாம். நீங்கள் பச்சை காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் அதிகம் சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களின் கால் தசைகள் வீங்கி, அங்கு தோலின் நிறம் மாறுவதைக் கண்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று விடுங்கள்..
Read more: நின்றபடி தண்ணீர் குடித்தால் ஆபத்தா? நிபுணர் கூறும் அறிவுரை…