For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீங்கிய முகத்துடன் ஃபோட்டோ பதிவிட்ட வனிதா விஜயக்குமார்.! பிக்பாஸ் 7 பிரதீப் சப்போர்ட்டர் தான் தாக்கினாரா.?

12:02 PM Nov 26, 2023 IST | 1newsnationuser4
வீங்கிய முகத்துடன் ஃபோட்டோ பதிவிட்ட வனிதா விஜயக்குமார்   பிக்பாஸ் 7 பிரதீப் சப்போர்ட்டர் தான் தாக்கினாரா
Advertisement

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் சகோதரியுமான வனிதா விஜயகுமார் தாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் நடிகையாக விஜய் நடித்த சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம் பெற்றதன் மூலம் புகழ்பெற்றார்.

Advertisement

யூடியூப் சமூக வலைதளத்தில் தனது சேனல் உருவாக்கி அதன் மூலம் பிக் பாஸ் பற்றிய விமர்சனங்களை பகிர்ந்து வருகிறார். இவரது மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான வசந்த பாலன் இயக்கிய அநீதி திரைப்படத்தில் நடித்திருந்தார் வனிதா விஜயகுமார். இந்தத் திரைப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

Bravely posting my attack . #BiggBoss7Tamil is just a game show on tv . I don’t deserve to go thru this pic.twitter.com/X6rI8io4GB— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 26, 2023

சமீபத்தில் தான் திருமணம் குறித்த சர்ச்சைகளில் இருந்து இவர் விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எக்ஸ் வலைதளத்தில் இவர் பகிர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தனது முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் வனிதா விஜயகுமார். மேலும் பிக் பாஸ் தொடரில் ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் பிரதீப் ஆண்டனி. இவர் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா மற்றும் மாயா ஆகியோரின் கூற்று சதியால் தான் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில் வனிதா விஜயகுமார் தனது சகோதரியின் வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறுவதற்காக வந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ரெட் கார்ட் கொடுக்கிறீர்களா.? எனக் கூறி இவரது முகத்தில் தாக்கியதாக குறிப்பிட்டு இருக்கிறார் வனிதா விஜயகுமார். பிக் பாஸ் என்பது ஒரு விளையாட்டு நிகழ்ச்சி என்றும் அதனைப் பற்றி விமர்சனம் செய்தது தனக்கு தேவையில்லாத ஒன்று எனவும் பதிவு செய்துள்ளார். மேலும் முகத்தில் காயத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்தப் பதிவு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது

Tags :
Advertisement