For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருது.!! மரியாதை செலுத்திய பிரேமலதா..!!

04:26 PM May 11, 2024 IST | Chella
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்ம பூஷண் விருது    மரியாதை செலுத்திய பிரேமலதா
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். தன்னுடன் நடிப்பவர்கள் அனைவரின் மீதும் அளவுக்கடந்த பாசத்தை காட்டியவர். தனக்கு வழங்கும் உணவையே கடைநிலை ஊழியர் வரை வழங்க வேண்டும் என கூறி அதனை செயல்படுத்தி காட்டியவர் விஜயகாந்த். இதனால் அனைவராலும் கேப்டன் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்பட்டார்.

Advertisement

தேமுதிக எனும் கட்சியை தொடங்கி தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை எட்டிப்பிடித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அரசியலில் இருந்து விலகிய விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தினமும் அங்கு ஏராளமானவர்கள் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அங்கு செல்வோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற விழாவில் விஜயகாந்த் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பெயர் அதில் இடம்பெறவில்லை. இதையடுத்து 2வது கட்டமாக டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஜனாதிபதி திரெளபதி முர்மு பங்கேற்று பத்ம விருதுகளை வழங்கினார். இந்த விழாவில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன் விஜய பிரபாகரன் பங்கேற்றனர். விழாவில் விஜயகாந்துக்கான பத்மபூஷன் விருதை பிரேமலதா விஜயகாந்த் பெற்று கொண்டார். இந்தியாவில் பத்ம பூஷன் விருது என்பது 3-வது உயரிய விருதாகும். இது மறைந்த நடிகர் விஜயகாந்தின் புகழுக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கிய பத்ம பூஷன் விருதை விஜயகாந்தின் நினைவிடத்தில் வைத்து பிரேமலதா விஜயகாந்த் மரியாதை செலுத்தினார். சுமார் 8 அடி உயர மாலையுடன் பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Read More :

Advertisement