முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

என்னை அடித்துக் கொண்டது பஞ்சு சாட்டையா..? அப்படினா உங்கள் மீது சோதித்து பார்க்க தயாரா..? சவால் விட்ட அண்ணாமலை..!!

Tamil Nadu BJP leader Annamalai has condemned Chennai Corporation 184th Ward member S.V. Ravichandran for his vulgar criticism of a university student who was a victim of sexual assault.
07:51 AM Dec 31, 2024 IST | Chella
Advertisement

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியை மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த சென்னை மாநகராட்சி 184-வது வார்டு உறுப்பினர் எஸ்.வி.ரவிச்சந்திரனுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு முழுவதுமே பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி 184-வது வார்டு உறுப்பினரும், 14ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

#ShameOnYouStalin குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் கொடுத்தது? இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011 திமுக ஆட்சியில் பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலியிடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக குண்டர் சட்ட வழக்கில் கைதானவர்.

https://twitter.com/annamalai_k/status/1873761642623951107

ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில் இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சு சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா..?” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்த லாரி..!! 71 பேர் உயிரிழந்த சோகம்..!!

Tags :
ShameOnYouStalinஅண்ணாமலைஎஸ்.வி.ரவிச்சந்திரன்கல்லூரி மாணவிபாலியல் வன்கொடுமை
Advertisement
Next Article