For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கர்ப்பிணி பெண்களே..!! லிப்ஸ்டிக் பயன்படுத்துறீங்களா..? கருவுக்கு ஆபத்து..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Lead used in lipsticks is dangerous for pregnancy. It can harm a pregnant woman and her fetus.
04:20 PM Nov 05, 2024 IST | Chella
கர்ப்பிணி பெண்களே     லிப்ஸ்டிக் பயன்படுத்துறீங்களா    கருவுக்கு ஆபத்து    வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

லிப்ஸ்டிக் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஈயம் கர்ப்பத்திற்கு ஆபத்தானது. இது ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அவளுடைய கருவுக்கும் தீங்கு விளைவிக்கும். லிப்ஸ்டிக் உதடுகள் வழியாக வயிற்றுக்குள் நுழைந்து இரத்தத்தில் ஈய அளவை அதிகரிக்கும். லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. லிப்ஸ்டிக்கில் சேர்க்கப்படும் பெட்ரோ கெமிக்கல்கள் நுண்ணறிவு, இனப்பெருக்க அமைப்பு மற்றும் உடல் வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

Advertisement

பெண்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்க பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களில் ஒன்று லிப்ஸ்டிக். ஆனால் தேசிய பயோடெக்னாலஜி தகவல் இணையதளத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, லிப்ஸ்டிக்கில் கலர் செய்ய மாங்கனீஸ், ஈயம், காட்மியம் போன்ற இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அடங்கிய லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உடலில் அலர்ஜி ஏற்படுகிறது. மற்றொரு ஆய்வின்படி, உதடுகளுக்குப் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களில் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ரசாயனங்கள் அடங்கிய லிப்ஸ்டிக்கை உதடுகளில் தடவினால், வாய் வழியாக வயிற்றுக்குள் நுழைந்து வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். எனவே லிஃப்டிக்கை நேரடியாக உதடுகளில் தடவாமல், அதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவவும். அதன் பிறகு, லிஃப்டிக் பயன்படுத்தப்பட வேண்டும். தேங்காய் எண்ணெய் உதடுகளை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Read More : வறண்ட காலநிலைக்கு பெயர் பெற்ற நாட்டில் இப்படி ஒரு அதிசயமா..? நீங்களே பாருங்க..!!

Tags :
Advertisement