For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை மக்களுக்கு எச்சரிக்கை!… அதிகரிக்கும் வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு பாதிப்பு!… நாளை காய்ச்சல் முகாம்கள்!

08:36 AM Dec 15, 2023 IST | 1newsnationuser3
சென்னை மக்களுக்கு எச்சரிக்கை … அதிகரிக்கும் வாந்தி  பேதி  வயிற்றுப்போக்கு பாதிப்பு … நாளை காய்ச்சல் முகாம்கள்
Advertisement

வாந்தி, பேதி, வயிற்றுப்போக்கு பாதிப்பு கண்டறியப்படுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

புயல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதேபோல, ஒவ்வொரு சனிக்கிழமையும், மாநிலம் முழுதும் மழைக்கால காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மழை பொழிவு உள்ள பகுதிகளில், ஒரு சிலர் வாந்தி, பேதி, வயிற்று போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவை பெரியளவில் இல்லையென்றாலும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: மாநிலம் முழுதும், மழை பெய்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், 60,000 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர். சிலருக்கு, வாந்தி, பேதி, வயிற்றுபோக்கு, காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இவை, பெரியளவில் இல்லை. ஆனால், மழை காலங்களில், தண்ணீரில் கழிவுநீர் கலக்கும் போது, இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். குடிநீரை நன்கு காய்ச்சி அருந்தினால், சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
Advertisement