முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழக மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!… தீவிரமடைந்த பறவைக்காய்ச்சல் பாதிப்பு!

06:20 AM Feb 18, 2024 IST | 1newsnationuser3
Advertisement

ஆந்திராவின் நெல்லூரில் கோழிப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களான 5 மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

ஆந்திரா மாநிலம் நெல்லுார் பகுதியில் உள்ள, கோழிப் பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த, 10 நாட்களில், 10,000 கோழிகள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளன. எனவே தமிழகத்தில், 'எச்5என்1' என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள கடிதத்தில், கோழிகள், காட்டு பறவைகள் மற்றும் அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில், பறவை காய்ச்சல் பாதிப்பு பரவும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், தலைவலி, கை, கால் தசைபிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை பறவை காய்ச்சலுக்கான அறிகுறியாகும். எனவே, கால்நடை துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வகை வைரஸால் பாதிக்கப்படும் பறவைகள் மற்றும் மனிதர்கள் குறித்து தகவல், பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுகாதாரமாக இருத்தல், கை கழுவுதல், பாதிக்கப்பட்டவர்களிடருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முககவசம் கட்டாயம் அணிதல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
bird fluதமிழக மாவட்டங்களுக்கு எச்சரிக்கைபறவைக்காய்ச்சல்
Advertisement
Next Article