முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கனமழை முன்னெச்சரிக்கை!… அமைச்சர்கள், கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவு!

06:25 AM Nov 15, 2023 IST | 1newsnationuser3
Advertisement

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. போதிய நீர்வரத்து இல்லாததாலும் வடகிழக்கு பருவமழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது.

Advertisement

குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் கன முதல் மிகக்கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை, அதாவது 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கைக் கடலோர பகுதிகளில் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவடையும் என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள 13 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் இது தொடர்பாக 13 மாவட்ட கலெக்டர்கள் , கண்காணிப்பு அலுவலர்களாக செயல்படவும், இவர்களுடன் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

Tags :
CM ordersWarning of heavy rainsஅதி கனமழைக்கான ரெட் அலர்ட்அமைச்சர்கள்அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்கலெக்டர்களுக்கு முதல்வர் அதிரடி உத்தரவுகனமழை முன்னெச்சரிக்கை
Advertisement
Next Article