For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எச்சரிக்கை!. சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கும் HMPV வைரஸ்!. வெளியான அதிர்ச்சி தகவல்!

Warning!. HMPV virus that affects diabetics the most!. Shocking information released!
06:02 AM Jan 21, 2025 IST | Kokila
எச்சரிக்கை   சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்கும் hmpv வைரஸ்   வெளியான அதிர்ச்சி தகவல்
Advertisement

HMPV: நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

முதன்முதலில் 2001-ம் ஆண்டு நெதர்லாந்தில் கண்டறியப்பட்ட ஹியூமன் மெட்டா நியூமோ (HMPV) வைரஸ், சுவாச அமைப்பை முதன்மையாக பாதிக்கும் நியூமோவிரிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு வகை ஆர்.என்.ஏ வைரஸ் ஆகும். காய்ச்சல், தலைவலி, மூக்கடைப்பு, இருமல், தும்மல், மூக்கு ஒழுகுதல், மூச்சுத் திணறல், உடல் சோர்வு, தொண்டை வலி போன்றவை இந்நோயின் பொதுவான அறிகுறிகள் ஆகும். இது பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் அதிகம் பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது சர்க்கரை நோயாளிகள், புற்று நோய் பாதிப்புள்ளவர்கள், எச்.ஐ.வி. நோயாளிகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து உட்கொள்ளும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கைக்குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் ஆகியோருக்கு நிமோனியா, மூச்சுக்குழலழற்சி, சுவாச செயலிழப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்நோய் இருமல் அல்லது தும்மலில் வெளிப்படும் வைரஸ் கலந்த சுவாச துளிகள் மூலமாகவும், தொடுவது அல்லது கைகுலுக்குவது போன்ற நெருங்கிய தொடர்புகளாலும், வைரஸ் படிந்த மேற்பரப்புகளை தொட்டு விட்டு, பின்னர் வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடுவதாலும் பரவுகிறது. இத்தொற்று 1 அல்லது 2 வாரங்களில் தானாகவே சரியாக கூடிய ஒரு தன்னியக்க நோயாகும். இது குளிர் காலங்களில் மட்டுமே காணப்படுகிறது. HMPV வைரஸ் நோய் தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை. இந்நோய் தொற்று வராமல் தடுக்க வழக்கமான சுகாதார முறைகளை பின்பற்றினால் போதும்.

Readmore: மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்கா வளைகுடா என்று அழைக்கப்படும்!. முதல் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் அதிரடி!

Tags :
Advertisement