சமைப்பதற்கு முன்பு, அரிசியை தண்ணீரில் ஊற வைப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதை படியுங்க..
பொதுவாக, சாதம் சமைப்பதற்கு முன், அரிசியை தண்ணீரில் ஊற வைத்து சமைக்க வேண்டும். அப்போது தான், நமது உடலுக்கு தேவையான பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, இதனால் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. அது மட்டும் இல்லாமல், அரிசியை தண்ணீரில் ஊற வைக்கும் போது, அதன் ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்பட்டு, ரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிக்காது, அதற்க்கு பதில் ரத்த சர்க்கரையின் அளவு எப்போதும் கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் முடிந்த வரை சாதத்தை சமைக்கும் முன்பு, சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து சமைப்பது நல்லது.
அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ளதாக கருதப்படுகிறது என்றாலும், ஒரு சிலர் அரிசியை சுமார் 3 அல்லது 4 மணி நேரம் கூட தண்ணீரில் ஊற வைப்பார்கள். ஆனால் இது முற்றிலும் தவறு. இப்படி அரிசியை பல மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பதால், அரிசியில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல் தண்ணீரில் கரைந்து விடுகிறது. இதனால் அரிசியில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதனால் அரிசியை அதிக நேரம் ஊற வைப்பதை தவிர்த்து விடுங்கள். அரிசியை சமைப்பதற்கு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். இதனால் அரிசியின் முழு பயன் கிடைக்கும். அதே சமயம் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு தான் சமைக்க வேண்டும். இது அரிசியின் அமைப்பை சரியாக வைத்திருக்கும்..
Read more: அடிக்கடி நரம்பு சுண்டி இழுக்குதா? இனி கவலையே வேண்டாம்.. அடிக்கடி இந்த பானத்தை குடிச்சா போதும்..