”20 ஆண்டுகளாக தேடப்பட்டவர்”..!! போலீஸ் என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொலை..!!
கர்நாடகாவில் போலீஸாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தலைவரான விக்ரம் கவுடா சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிக்மகளூர்-உடுப்பி எல்லையில் உள்ள சீதம்பைலு வனப்பகுதியில் நேற்று கடும் துப்பாக்கிச்சூடு நடந்தது. மாவோயிஸ்ட் ராணுவ நடவடிக்கைகளின் தலைவரான கவுடா, தென்னிந்தியாவின் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர். கடந்த சில நாட்களாக சிருங்கேரி, நரசிம்மராஜ புரா, கார்கலா, உடுப்பி போன்ற பகுதிகளில் கவுடாவின் நடமாட்டம் இருந்தது.
இந்த பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரம் கவுடா 2016ஆம் ஆண்டு நிலம்பூர் என்கவுண்டரில் இருந்து தப்பிய மாவோயிஸ்ட் கமாண்டர் ஆவார். கர்நாடக போலீசார் மற்றும் நக்சல் தடுப்புப் படையினர் ஹிப்ரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 5 மாவோயிஸ்டுகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து, நடந்த என்கவுண்டரில் விக்ரம் கவுடா கொல்லப்பட்டார்.
இந்த என்கவுன்டரின் போது 3 மாவோயிஸ்ட் தலைவர்கள் தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் முண்ட் கரு லதா, ஜெயன்னா மற்றும் வனஜாக்ஷி. இவர்கள் 2 மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து உடுப்பிக்கு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
Read More : ”கணவன், மனைவியாக இருந்தாலும் கட்டாயம் இது இருக்க வேண்டும்”..!! ஐகோர்ட் கிளை நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..!!