உங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை குறைக்க வேண்டுமா?…இதோ உங்களுக்காக…!
குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதைக் குறைப்பதற்கான சில வழிகளை நாம் பார்க்கலாம். இன்றைய வாழ்க்கை முறையில் துரித உணவுகளும்,ஒழுங்கற்ற உணவு முறைகளாலும் நிறைந்துள்ளது.நம் குழந்தைகள் எண்ணெயில் பொரித்த உணவுகள்,பாக்கெட் பொருட்கள் போன்ற உணவுகளை விரும்புகின்றனர். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிடுவது உடலுக்கு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
முதலில் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்துவதற்கு அவர்களிடம் அதன் பாதிப்புகளை எடுத்துரைக்க வேண்டும். உடல் எடை அதிகரிப்பு, பற்கள் பாதிப்பு, வயிறு உபாதைகள், ஒவ்வாமை போன்றவற்றை குழந்தைகளுக்கு புரியும் வகையில் சொல்ல வேண்டும்.
ஆரோக்கியமான உணவுகளை தருவது: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை தரலாம். அவர்களுக்கு வீட்டிலேயே சத்தான உணவுகளை செய்து தரலாம். குளிர்பானம் கேட்கும்பொழுது குழந்தைகளுக்கு ஆப்பிள்,மாதுளை,எலுமிச்சை போன்ற பழச்சாறுகளை தரலாம்.ஐஸ்க்ரீம் கேட்பவர்களுக்கு அதற்கு பதிலாக லஸ்ஸி போன்றவைகளை தரலாம்.
எடுத்துக்காட்டாக இருங்கள்: உங்கள் குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்துவதற்கு முதலில் நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.குழந்தைகள் முன் நீங்கள் சாப்பிட்டால் அவர்களும் சாப்பிடுவார்கள்.அதனால் நீங்கள் அதை கைவிட வேண்டும்.
தண்ணீர் குடிக்கவேண்டும்: குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.இது சர்க்கரை பானங்கள் குடிக்கும் ஆசையை தவிர்க்கும்.
சமையலில் ஈடுபட செய்தல்: நீங்கள் சமைக்கும்போது அவர்களை உடன் சேர்த்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு சமையலை சுவைக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.
கட்டுப்பாடு அமைத்தல்: குழந்தைகளுக்கு ஜங்க் ஃ புட்டிற்கு தடை சொன்னால் அது அவர்களுக்கு ஏக்கத்தை தரும். அதற்கான நேரக் கட்டுப்பாடு அமைத்து தரவேண்டும்.அவர்கள் கண்களுக்கு ஆரோக்கியமான உணவுகள் படும்படி வைக்க வேண்டும் .பழங்கள், நட்ஸ் வகைகள் போன்றவற்றை பழகலாம்.