வீட்டில் கூரையை பிச்சுட்டு பணம் கொட்டனுமா.? இந்த செடிகளை வளர்த்துப் பாருங்கள்.!
வாஸ்து சாஸ்திரம் என்பது சாஸ்திரத்தில் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் ஒருவரின் வீடு அமைப்பு மற்றும் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டே அவரது நேர்மறை சிந்தனை மற்றும் செல்வ வளம் ஆகியவற்றில் மாற்றங்களை கொண்டுவர முடியும். நமது வீட்டில் அமைதி நிலவ நேர்மறை சிந்தனைகள் பெருக மற்றும் செல்வ வளம் கொழிக்க பின்வரும் செடிகளை வளர்க்கலாம். அந்தச் செடிகளினால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அவற்றை வளர்க்கும் முறை பற்றி பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் மூலம் ஒருவரது வாழ்வில் நேர்மறை சிந்தனைகள் பெருகி செல்வ வளம் பெற முடியும். சிலர் செடிகளை அழகுக்காகவும் புத்துணர்ச்சிக்காகவும் வீட்டில் வளர்த்தாலும் சில செடிகள் பொருளாதார ரீதியாக நன்மை தரக்கூடியது என வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது. மேலும் இவை நேர்மறை சிந்தனைகளையும் அதிகரிக்கிறது. இந்த செடிகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் வீட்டில் பொருளாதார வளம் பெறுக வளர்க்க வேண்டிய முதல் செடி மணி பிளான்ட். இது வீட்டிற்கு பொருளாதார சூழ்நிலை மேம்படுத்துவதோடு மங்களகரமான அடையாளங்களையும் கொண்டு வருகிறது. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது துளசி. இந்துக்களின் மத நம்பிக்கைப்படி புனித செடியாக கருதப்படும் இது லட்சுமி தேவியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி இந்த செடியானது வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் இருக்க வேண்டும். இது அந்த வீட்டின் செல்வ செழிப்பை மேம்படுத்துவதோடு நேர்மறை சிந்தனைகளையும் அதிகரிக்கிறது
வாஸ்து சாஸ்திரத்தில் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுவது அருகம்புல். இந்தச் செடியை வீட்டின் பால்கனியில் அல்லது முற்றத்தில் பயிரிட வேண்டும். அப்போதுதான் செல்வ செழிப்பு அதிகரிக்கும். இது வீடுகளுக்கு செல்வ செழிப்பை கொண்டு வருவதோடு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியையும் நிலவச் செய்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் செல்வத்திற்காக வளர்க்கப்படும் நான்காவது மரமாக ஜெட் செடி இருக்கிறது. இது வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரித்து அமைதி நிலவச் செய்கிறது. இந்தச் செடியை வளர்ப்பதால் வீட்டில் குழப்பம் நீங்கி அமைதி மற்றும் மகிழ்ச்சி செழிக்கும்.