முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்கள் வீட்டை விற்கும்போது அதிக லாபம் பார்க்கணுமா..? நச்சுன்னு 4 டிப்ஸ்..!!

07:27 AM Dec 26, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பழைய வீடுகளை விற்பனை செய்ய சரியான சந்தை நிலவரப்படி தொகை நிர்ணயிக்கப்பட்டாலும், அவற்றை எளிதாக விற்பனை செய்துவிட முடியாது. விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பழைய வீட்டை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், வீட்டை வாங்கும் போது, பல்வேறு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் உங்களிடம் உள்ள பழைய வீட்டை விற்பனை செய்துவிட்டு, புதிய வீட்டை வாங்குவதாக இருந்தால், மிக கவனமாக இருக்க வேண்டும்.

Advertisement

பொதுவாகவே, நாம் ஒரு பொருளை வாங்க சென்றால் அதற்கு விலை அதிகமாகவும், அதே பொருளை விற்க சென்றால், அதற்கான விலை குறைவாகவும் மதிப்பிடப்படுகிறது. இதனால், நீங்கள் விற்கும் பழைய வீட்டில் சிறிய அளவிலான குறைபாடுகள் இருப்பின் அதை சரி செய்ய வேண்டும். சில ஆயிரம் ரூபாயில் சரி செய்யக் கூடிய சிறிய உடைப்பாக இருக்கலாம். ஆனால், அதை சரி செய்யாவிட்டால், விற்பனையின் போது, சில லட்சங்கள் குறைத்து மதிப்பிடப்படும்.

ஆகையால், வீட்டை விற்பனை செய்வதென்று முடிவெடுத்துவிட்டால், வெளிப்புற தோற்றம் கண்ணை கவரும் விதத்தில் இருக்க வேண்டும். அதனால், தகுந்த எக்ஸ்டீரியர் பெயிண்ட் மூலம் சற்று குறைவான பட்ஜெட்டில் வெளிப்புற தோற்றத்தை அழகாக மாற்றுவது அவசியம். அதில் சிறு உடைப்புகள், சிறு விரிசல்கள் இருந்தாலும் அதை சரி செய்து விடுங்கள். கதவு, ஜன்னல் போன்றவற்றில் துரு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் விநியோக குழாய் உடைப்புகளை சரி செய்யுங்கள். வீட்டின் அனைத்து பகுதியிலும் புதிய பெயிண்ட் அடித்து இருப்பதும் நல்லது.

மேலும், விற்பனைக்கு முன் சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவற்றை நிலுவை இல்லாமல் செலுத்திவிடுங்கள். விற்பனைக்கு முன், அதை வாங்குவோருக்கு தேவையான ஆவணங்களை தொகுப்பாக எடுத்து வைத்துக்கொள்வதுடன், சில பிரதிகளை நகல் எடுத்து வைப்பதும் நல்லது. சீரமைப்பு பணிகள் சரியாக செய்திருந்தால், அதை வாங்க வருவோருக்கு நல்ல நம்பிக்கை ஏற்படும் என்று ரியல் எஸ்டேட் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags :
அதிக லாபம்கட்டுமானம்பழைய வீடுவிற்பனைவீடு
Advertisement
Next Article