முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உங்க வீட்டில் கொசு வராமல் இருக்க வேண்டுமா...? இது மட்டும் ஃபாலோ பண்ணி பாருங்க..‌!

Want to keep mosquitoes out of your home? Just follow this and see...
08:30 AM Jul 17, 2024 IST | Vignesh
Advertisement

மாலை வேளை என்று ஒன்று வந்துவிட்டாலே முதல் வேலையாக கதவு, ஜன்னல்களை அடைப்பதுதான் மக்களின் வழக்கமாக உள்ளது. மாலை 5 மணிக்கு மூடி 7 மணி வரை அடைத்து விட்டால் கொசு வராது என்று நம்பிக்கையுடன் கதவு, சன்னல் அடைத்து விடுகிறார்கள். அதனை வெறும் நம்பிக்கை தானே என்று புறந்தள்ளிவிட முடியாது. அதில் உண்மையும் இருக்கத்தான் செய்கிறது.

Advertisement

பொதுவாக மக்கள் கொசு என்றாலே எல்லாம் ஒரே விதம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மாலை வேளையில் காணப்படும் கொசுக்களும் மற்ற நேரத்தில் கடிக்கும் கொசுக்களும் வெவ்வேறானவைதான். மாலை நேர கொசுக்கள் மற்ற நேரங்களில் காணப்படும் கொசுக்களைவிட அளவில் சற்று பெரியதாக காணப்படும். அளவு மட்டுமல்ல அவைகள் கடித்தால் ஏற்படக்கூடிய வலியும் அதிகமாக இருக்கும். அப்போது அவைகள் பரப்பும் நோய்களும் அதிகமாக இருக்குமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் ஏற்படக்கூடும். ஆனால் ஆச்சர்யப்படுத்தும் பதில் என்னவென்றால் "இந்த வகை கொசுக்கள் எந்த நோயையும் பரப்பாது" என்பதுதான்.

நோயே பரப்பாத இந்த பெரிய சைஸ் கொசுக்களின் பெயர் "ஆர்மிஜிரஸ்" என்பதாகும். இந்த ஆர்மிஜிரஸ் கொசுக்களின் பிரத்யேக தன்மைகளை தெரிந்து கொள்வதே அவை உருவாவதை தடுத்துக் கொள்ளும் முதல் அடியாகும். வீடுகளே இக்கொசுக்களின் முதன்மை உற்பத்தி இடங்களாகும். அதுவும். குறிப்பாக சொன்னால் 'செப்டிக் டேங்க்' தான் இக்கொசுக்களின் தலைமை பிறப்பிடம். செப்டிக் டேங்கில் ஓட்டையோ, உடைப்போ இருந்தால் அதன் வழியே உட்சென்று ஆயிரக்கணக்கான முட்டைகள் இட்டு தனது சந்ததியை பெருக்கி விடுகின்றன.

அந்த ஆர்மிஜிரஸ் கொசுக்கள் ஓட்டை உடைசல் இல்லாமல் செப்டிக் டேங்க் நன்றாக இருந்தாலும் செப்டிக் டேங்கின் காற்றுப் போக்கியின் வழியே உட்சென்று முட்டையிட்டு பெருகுபவையாகும். எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கில் ஓட்டைகளோ சிலாப்பில் உடைப்போ இருந்தால் சிமெண்ட் கொண்டு அடைப்பது கொசு உற்பத்திக்கு எதிரான முதல் தடுப்பு நடவடிக்கையாகும்.

இரண்டாவது தடுப்பு நடவடிக்கை செப்டிக் டேங்கின் காற்று போக்கியின் திறந்த முனையை வீட்டில் உள்ள சாக்குப்பை, சிமெண்ட் பை, துணி, நைலான் வலை, துருப்பிடிக்காத இரும்பிலான கொசுவலை போன்றவற்றால் இறுகக்கட்ட வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், உள்ளே இருந்து காற்று வெளிவர வேண்டும். ஆனால் வெளியிலிருந்து கொசு உள்ளே போகக்கூடாது. செப்டிக் டேங்க் மட்டுமல்லாமல், கழிவுநீர் தேங்கி நிற்பதும் இக்கொசுக்கள் உருவாக வழி வகுக்கும். வீட்டுத்தோட்டம் அமைத்து, இக்கழிவு நீரை முறையாக பயன்படுத்துவதும் சிறந்த முறை ஆகும். அகற்றப்பட முடியாத வகையில் கழிவுநீர் தேங்கி நிற்கும் போது தற்காலிக முறையாக அவற்றின் மீது மண்ணெண்ணெய் அல்லது இதர எண்ணெய்களை ஊற்றி கொசு உருவாவதை தடுக்கலாம். இருப்பினும் வீட்டை சுற்றி கழிவுநீர் தேங்காமல் தவிர்ப்பதே சிறந்தது.

Tags :
DenguemosquitoPreventing measures
Advertisement
Next Article