3 நிமிஷம் போதும்.. "மத்திய அரசிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் பெறலாம்.." நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத்தை சேர்ந்த இவர் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகும் சில மாநிலங்களில் மன்னர் ஆட்சி மற்றும் சுய ஆட்சி நடைபெற்று வந்தது. .
அவற்றில் இருந்து மாநிலங்களை விடுவித்து இந்தியாவுடன் இணைத்து ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு காரணமாக அமைந்ததால் இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவரை சிறப்பிக்கும் வகையில் ஒற்றுமை ட்ரினிட்டி என்ற வினாடி வினா நிகழ்ச்சியை மத்திய அரசு அறிவித்தது. ஜனவரி 1 2024 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வினாடி வினா நிகழ்ச்சி இன்று இரவு 11:30 மணியுடன் முடிவடைகிறது.
இந்தியர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும் நிகழ்ச்சிகள் வெற்றி பெறுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் முதல் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் இடம் பெறுபவருக்கு 3 லட்ச ரூபாய் மற்றும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. சிறப்பாக செயல்படும் 100 போட்டியாளர்களுக்கு 2,000 ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்த பரிசுத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை. இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் வாழ்க்கை குறிப்பு வரலாறு அவர் வகித்த பதவிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த கேள்விகள் இடம்பெறுகிறது.
இந்த வினாடி வினா போட்டிகளில் கலந்து கொள்வதற்கு https://quiz.mygov.in/quiz/sardar-unity-trinity-quiz- என்ற இணையதள முகவரிக்கு சென்று நமது கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதில் கணக்கை உருவாக்குவதற்கு செல்போன் எண் அல்லது அதார் எண்னை பயன்படுத்தலாம். கணக்கை உருவாக்கியதும் வினாடி வினா போட்டியில் கலந்து கொள்ள https://quiz.mygov.in/quiz/sardar-unity-trinity-quiz-swabhimani-bharat-english- என்ற இணையதளத்தை கிளிக் செய்யவும்.
இந்த வினாடி வினா போட்டியின் கால அளவு 200 நொடிகள் ஆகும். ஒவ்வொரு கேள்விக்கும் 20 நொடிகளுக்குள் பதில் அளிக்க வேண்டும். இதில் கலந்து கொள்வதற்கு இணையதள பக்கத்தில் உள்ளே நுழைந்ததும் 'START QUIZ' பட்டனை கிளிக் செய்து வினா வினா போட்டியில் கலந்து கொள்ளலாம். கேள்விகள் அனைத்திற்கும் பதில் அளித்த பின்னர் சப்மிட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து நமது விடைகளை பூர்த்தி செய்யவும். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் முன்னர் வினாடி வினா காலம் முடிவடைந்து விட்டால் போட்டி தானாகவே முடிந்து விடும். மேலும் போட்டியாளர்களுக்கு அரசு சான்றிதழ் திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம்.