சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா..? அடிக்கடி உணவில் இதை சேர்த்து வந்தால் சூப்பர் ரிசல்ட்..!!
பால் உணவான பன்னீரை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்தவும், குழந்தையின்மை பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ள பன்னீர் இந்திய சமையலின் ஒரு அங்கமாக உள்ளது. சுவை மிகுந்த உணவு என்பதால், சைவ உணவு உண்பவர்களுக்கு பன்னீர் பிடித்தமான உணவாக இருக்கிறது.
பன்னீர் என்பது ரோசாப் பூவிதழ்களால் வடிகட்டிப் பெறப்படும் வடிபொருள் ஆகும். மேலும் இதில், கால்சியமும், புரதச்சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும், இதில் புரதம் மட்டுமல்லாது, செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் உதவுகிறது.
செலினியம் கருவுறாமை, குழந்தையின்மை பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு உள்ளதால், இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பன்னீரை சாப்பிடுவதில் சரியான முறையை கடைபிடித்தால், முழுமையாக அதன் ஊட்ட சத்துக்களை பெற முடியும். அதன்படி, பன்னீரை எப்படி உட்கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதில், குறைவான கலோரிகளை கொண்ட பன்னீரை உட்கொள்வதால், எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று கூறுகின்றனர்.
மேலும், அதை சமைப்பதால் சில சத்துக்கள் இழக்கப்படுகின்றன என்றும் அதனால், பன்னீரை பச்சையாகவே சாப்பிடலாம். இதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பன்னீர் சாப்பிடும் போது உடனடி ஆற்றல் கிடைக்கிறது. இது உடல் மெட்டா பாலிசத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் கொழுப்பு தங்க அனுமதிக்காது. பன்னீர் என்பது லினோலிக் அமிலத்தின் சிறந்த மூலமாகும், இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.