இதை விடவா வேறு கொசு விரட்டிகள் வேண்டும்..? வீட்டிலுள்ள பொருட்களே போதும்..!!
வீட்டில் இருந்து நோய்கள் மற்றும் கொசுக்கள் வராமல் இருக்க சமையலறையில் இருக்கும் சில பொருட்களே போதும். அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
எலுமிச்சை : எலுமிச்சம் பழம் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை கொசுக்களை விரட்ட மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சையை பாதியாக வெட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து பிறகு எலுமிச்சை தோலுடன் கடுகு எண்ணெய் மற்றும் கிராம்பு, கற்பூரத்தை சேர்த்து எரிக்கவும். இதை வீட்டின் மூலையில் வைத்தால் கொசுக்களின் தொல்லை இருக்காது.
துளசி : வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்க வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் துளசி இலைகளை வைக்கலாம்.
கற்பூரம் : கற்பூரத்தை எரிப்பதால் வீட்டில் அதிக புகை வராது. இந்த கற்பூரத்தில் இருந்து வெளிப்படும் புகை கொசுக்களை விரட்டிவிடும். மேலும், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு கற்பூரம் மிகவும் நன்மை பயக்கும்.
பூண்டு : 2 முதல் 4 பல் பூண்டுகளை நசுக்கி,1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை ஆற வைத்து ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி வீடு முழுவதும் தெளிக்கலாம்.
காபி : கொசுக்களுக்கு காபியின் வாசனையே பிடிக்காது. இந்த காபி மருந்தை தயாரிக்க முதலில் ஒரு பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் 1 டீஸ்பூன் காபி கலந்து வீடு முழுவதும் ஸ்பிரே செய்யலாம்.
Read More : டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகரன் ஐஏஎஸ் நியமனம்..!! ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு..!!