தட்டையான வயிறு வேண்டுமா..? அப்படினா தினமும் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிங்க..!!
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் கொத்தமல்லிக்கு (தனியா) என்றுமே முக்கிய இடமுண்டு. கொத்தமல்லி இல்லாமல் சமையலே இல்லை என்று கூறலாம், உணவுக்கு நறுமணத்தை வழங்குவது இதுதான். இந்த பதிவில் கொத்தமல்லி நீர் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. செரிமானத்தை தூண்டுவதுடன் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை சீராக்குவதுடன் சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளையும் சரி செய்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் மற்றும் இரும்பு சத்துக்களால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீர் குடிப்பது சருமத்தை ஆரோக்கியமாக்கும். காரமான உணவுகளை உட்கொள்ளும் போது உடற்சூடு அதிகரிக்கும். அப்போது, இந்த கொத்தமல்லி தண்ணீரை பருகி வந்தால் உடல் சூடு தணியும். தினமும் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரில் வெளியேறும், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மூட்டு வீக்கத்தை குறைப்பதன் மூலம் மூட்டு வலியை சரி செய்யவும் உதவுகிறது.
கொத்தமல்லி தண்ணீர் தயாரிப்பது எப்படி?
* பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்னர், அதில் தேன் சேர்த்து அருந்தலாம்.
* இன்னும் அதிகப்படியான நன்மைகளை பெற விரும்பினால், இரண்டு நிமிடத்திற்கு வெறும் தண்ணீரில் கொத்தமல்லி விதைகளை ஊறபோட்டும் வைக்கலாம். தண்ணீர் பாதியாக வற்றியவுடன் வடிகட்டி குடித்தால் பல நன்மைகளை பெறலாம்.
Read More : உங்கள் சொத்து ஆவணங்கள் தொலைந்து விட்டதா..? அப்படினா உடனே இந்த விஷயத்தை பண்ணுங்க..!!