தமிழ்நாட்டில் தீவிரமடையும் வாக்கிங் நிமோனியா..!! சிகிச்சை பலனளிக்கவில்லை..!! ICU தான்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
தமிழ்நாட்டில் வாக்கிங் நிமோனியா அதிகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போது குளிர்காலம் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதற்கிடையே, வாக்கிங் நிமோனியாவும் பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, 5 வயது முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாக்கிங் நிமோனியா பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்.
வாக்கிங் நிமோனியா என்பது தீவிர தன்மை குறைந்த நிமோனியா ஆகும். இதன் அறிகுறிகளாக சளி, இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடற்சோர்வு ஆகியவை இருக்கும். பொதுவாக, வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை இருக்காது. ஆனால், தற்போது வாக்கிங் நிமோனியா பாதிக்கப்பட்டவர்கள் அவசர பிரிவில் சேர்க்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாக்கிங் நிமோனியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆண்டிபயாடிக் மருந்தே போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பலருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் பெரிய அளவில் பலன் தருவதில்லை என்றும், இதனால் நோயின் தீவிரம் அதிகரித்து ஐ.சி.யூவில் சேர்க்கும் சூழல் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.