"புடவையை தூக்கி கட்டும்மா... பார்க்க கஷ்டமா இருக்கு" தொகுப்பாளினிக்கு பிரபல நடிகர் கொடுத்த அட்வைஸ்..
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுடன் நடித்து பிரபலமானவர் தான் VTV கணேஷ். போடா போடி படத்தின் மூலம் ரசிகர்களிடையே அதிக பரீட்சையமான இவர், தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றார். சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி, இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. இந்நிலையில், நாளை (டிசம்பர் 20) ரிலீஸ் ஆக இருக்கும் முசாஃபா என்னும் அனிமேஷன் படத்தில் இவர் பின்னணி குரல் கொடுத்துள்ளார். அந்த படத்திற்கு இவருடன் சேர்ந்து நடிகர்கள் நாசர், சிங்கம் புலி, ரோபோ சங்கர், அசோக் செல்வன், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இந்த படத்திற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் விழாவில், படத்திற்கு பின்னணி குரல் கொடுத்த அத்தனை நடிகர்களும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தொகுப்பாளனி ஏஞ்சலின். இவர் சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பிரபலங்களை பேட்டி எடுத்து வைரலாகி வருகிறார். இந்நிலையில், மேடையில் இருந்த VTV கணேஷ் மற்றும் சிங்கம் புலி இருவரும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். விடிவி கணேஷ் பேசி முடித்துவிட்டு அனைவருக்கும் நன்றி கூறிய VTV கணேஷ், தொகுப்பாளினி ஏஞ்சலினுக்கும் நன்றி கூறினார்.
பின்னர், அவர் எஞ்சலினை பார்த்து புடவையை கொஞ்சம் தூக்கி கட்டுமா, கால் தவறி கீழே விழுந்திட போற, பார்க்க கஷ்டமா இருக்கு என்று கூறினார். இதனால் ஏஞ்சலுக்கு தர்ம சங்கடமாக இருந்தாலும், அவர் சிரித்துகொண்டே சமாளித்து விட்டார்.
Read more: ““நடிகர் சூர்யாவுக்கு செய்வினை வச்சுருக்காங்க” பயில்வான் ரங்கநாதன் அளித்த பரபரப்பு பேட்டி…