Lok Sabha தேர்தலில் வாக்களிக்காவிட்டால் வாக்காளர்களுக்கு அபராதம்..!! வைரலாகும் தகவலின் உண்மை என்ன..?
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இன்று வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். மேலும், நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதற்கிடையே, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் படு வைரலாகி வருகிறது. வாக்காளிக்காவிட்டால், வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB FACT CHECK அமைப்பு, ‘இது தவறான தகவல் என்றும் தேர்தல் ஆணையம் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
Read More : மக்களே உஷார்..!! இந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தா எடுக்காதீங்க..!! மத்திய அரசு திடீர் எச்சரிக்கை..!!