”விஜய்யை பாராட்டியே ஆக வேண்டும்”..!! அவராவது அதை செய்கிறார்..!! ஆனால் உதயநிதி..? சீமான் கடும் விமர்சனம்..!!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை வெள்ளம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார். ஆனால், விஜய் பாதிக்கப்பட்டவர்களை தனது அலுவலகத்துக்கு வரவைத்தது தொடர்பாக விமர்சனம் எழுந்தது.
விஜய் Work From Home அரசியல்வாதியாக செயல்பட்டு வருவதாக நெட்டிசன்கள் கிண்டலாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், விஜய் தனது அலுவலகத்திற்கு மக்களை வரவைத்து நிவாரண உதவிகள் வழங்கியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ”விஜய்யால் களத்தில் போய் நிற்க முடியாது. காரணம், பாதிக்கப்பட்ட மக்களை விட, அவரை பார்க்க வேண்டும் என்று வருகிற கூட்டம் அதிகமாகிவிடும். அதனை சமாளிப்பதே பெரும்பாடாகிவிடும். அப்படி கூட்டம் கூடி ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கும் ஒரு விமர்சனம் எழும்.
விஜய்யின் உதவும் எண்ணத்தை பாராட்ட வேண்டும். அவராவது உதவி செய்கிறார். ஆனால், உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை அமைச்சர்கள் எல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தார்களே? அதை என்ன சொல்வது?" விமர்சித்தார். மேலும், "பேரிடர் காலங்களில் தமிழ்நாட்டிற்கான நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றால் நீங்கள் ஏன் அவர்களுக்கு வரி செலுத்துகிறீர்கள்..? அதை தர முடியாது என்று சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.
Read More : புயல் பாதிப்புக்கு மத்தியில் மேலும் ஒரு அதிர்ச்சி செய்தி..!! பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!!