வாக்காளர் சேர்க்கை முகாம் தேதி மாற்றம்...! மீண்டும் எப்பொழுது நடைபெறும்...? புதிய தேதி அறிவிப்பு...!
வாக்காளர் சேர்க்கை முகாம் நவம்பர் 18, 19 ஆம் தேதிக்கு பதிலாகநவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் அதாவது 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயதை பூர்த்தி அடையும் நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6-ல் விண்ணப்பிக்கலாம். இவர்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர், 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் 17 வயதை பூர்த்தி அடைந்த நபர்களும் விண்ணப்பிக்க ஏதுவாக நவம்பர் 18, 19 ஆம் தேதிக்கு பதிலாகநவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.