For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இலவச தொழிற் பயிற்சி + ரூ.750 கல்வி உதவித்தொகை...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!

Vocational training plus Rs.750 education stipend
07:03 AM Aug 28, 2024 IST | Vignesh
இலவச தொழிற் பயிற்சி   ரூ 750 கல்வி உதவித்தொகை     தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Advertisement

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .

Advertisement

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்களுக்காக நாகர்கோவில், உளூந்தூர் பேட்டை மற்றும் கிண்டி ஆகிய 03 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பிரத்யேகமாக Fitter (Deaf and Dumb) என்ற தொழிற்பிரிவு இயங்கி வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 5% இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் 2024-2025- கல்வியாண்டிற்கான பயிற்சியாளர்களுக்கான நேரடி சேர்க்கை 16.08.2024 வரை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2024 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். மேலும்,தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள் (Shoes), விலையில்லா வரைபடக் கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.

காதுகேளாதோர் மற்றும் வாய்பேசாதோர் மாணவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி நாகர்கோவில், உளுந்தூர்பேட்டை மற்றும் கிண்டி தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். மாற்று திறனாளிகள் மற்றும் அனைத்து மாணவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தாம் விரும்பும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement