வீட்டில் கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் கஷ்டம் வரும்... இப்படி வைத்தால் ஆபத்து வராம தடுக்கலாம்..
கற்றாழையை இந்த திசையில் வீட்டில் வைப்பதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்க்கின்றனர்.
கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என்பதாலும், மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளதன் காரணமாக பலரும் அதை தங்கள் வீடுகளில் வளர்க்க விரும்புகின்றனர். கற்றாழை முகத்திற்கு பளபளப்பைத் தருவது மட்டுமல்லாமல், கற்றாழை செடியை வீட்டில் நட்டால், அது அந்த நபரின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக, கற்றாழை வாஸ்து தோஷத்தை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.
வீட்டில் வைக்கப்படும் பொருள் வாஸ்து படி இருந்தால் தான் நேர்மறை ஆற்றல் பரவுமாம். அப்படி தான் கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது.
வீட்டில் வைக்கப்படும் பொருள் வாஸ்து படி இருந்தால் தான் நேர்மறை ஆற்றல் பரவுமாம். அப்படி தான் கற்றாழை செடியை தவறான திசையில் வைத்தால் வீட்டில் கஷ்டம் வரும் என சொல்லப்படுகிறது. அதனால் அதன் விதிகளை தெரிந்து கொள்ளலாம்.
கற்றாழை செடியை வீட்டின் கிழக்கு திசையில் நடக்கூடாது. கிழக்கு திசையில் இருந்து நேர்மறை ஆற்றல் நுழைவதால், உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் கற்றாழை செடியை நட்டால், எதிர்மறை ஆற்றல் பரவ ஆரம்பித்து, வீட்டில் சச்சரவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
பொதுவாக காலையில் எழுந்தவுடன் நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் கற்றாழை செடியை பார்ப்பது நல்லதல்ல. மேலும் உங்கள் படுக்கையறையில் கற்றாழை செடியை வைத்தால் காலையில் இந்த செடியைப் பார்ப்பதன் மூலம் உங்கள் வழக்கத்தைக் கெடுத்துவிடும். அதேபோல்,
படுக்கையறையில் ஒரு முள் செடி இருப்பதும் குடும்ப வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், குடும்பத்தின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. இதனால் வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்படுவதாக கருதப்படுகிறது.
read more ..ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர்… உண்மையை மறைக்க முயற்சி..! புதிய சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை…!