அடிக்கடி நீங்க சோர்வா இருக்க காரணம் என்ன தெரியுமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்...
நமது உடலுக்கு மிகவும் தேவையான சத்துக்களில் ஒன்று தான், வைட்டமின் சி. நமது உடலில் வைட்டமின் சி, குறையும் போது, பல பாதிப்புகள் ஏற்படும். ஆம், குறிப்பாக
நோய் எதிர்ப்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டு, காயங்கள் ஆற தாமதம் ஆகும். மேலும், ரத்த நாளங்களின் பலம் குறைந்து விடும். எலும்பு ஆரோக்கியமாக இல்லாமல் போவதற்கு வைட்டமின் சி குறைபாடு தான் முக்கிய காரணம். இதனால், எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் புரதச்சத்தில் ஒன்று தான், கொலாஜென். வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், உங்கள் சருமத்தில் கொலாஜென்கள் சரியான அளவில் சுரக்க்காமல், தசைகளை பலவீனமாக்கிவிடும்.
ஒரு சிலருக்கு, சிறிய அழுத்தம் கொடுத்தாலே, ரத்தம் வருமளவு காயம் ஏற்படும் இதற்கு காரணம் வைட்டமின் சி குறைபாடு தான். வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால், பலவீனம், உடையும் நகங்கள், தலைமுடி உதிர்வு ஆகியவை ஏற்படும். இந்த காரணத்தால் உங்களின் முடி உதிரும் பட்சத்தில், நீங்கள் எந்த எண்ணெய், ஷாம்பூ பயன்படுத்தினாலும் எந்த பயனும் இல்லை. ரத்த நாளங்கள் மெல்லிசானால் அதில் இருந்து எளிதாக ரத்தம் கசியும். வைட்டமின் சி குறைபாடு ஏற்பட்டால், ஈறுகளில் உள்ள திசுக்களில் சிதைவு மற்றும் வீக்கம் ஏற்படும். வைட்டமின் சி சத்துக்கள் குறைந்தால், கண் பார்வை குறைபாடு ஏற்படும். உடலில், வைட்டமின் சி சத்துக்கள் குறையும்போது, சோர்வு, அதிக சோர்வு கூட ஏற்படும்.