100 நோய்களுக்கு ஒரே தீர்வு; இந்த பொடியை அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்..உங்கள் குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்..
உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொடுக்கும் ஒரே பொருள் என்றால் அது முருங்கை தான். முருங்கையில் இல்லாத சத்துக்களே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பல சத்துக்களை கொண்டது தான் இந்த முருங்கை. ஆனால் பலர் இந்த முருங்கையை பயன்படுத்த மாட்டார்கள். இதற்க்கு காரணம் அதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால் இத்தனை அற்புதமான முருங்கை இலையை சாப்பிடுவதால் 100 விதமான நோய்களை தடுக்க முடியும். இதனால், முருங்கை இலையின் சுவை பிடிக்காத குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொடி செய்து கொடுக்கலாம். இப்படி பொடி செய்து கொடுத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பொடியை தொடர்ந்து சாப்பிடுவதால், முடி உதிர்வு, இரத்த சோகை, உடல் சோர்வு என அனைத்து பிரச்சனைக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இந்த பொடியை, சாதாரண இட்லி பொடி போல் அரைத்து வைத்துக் கொள்ளலாம். பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் இந்த பொடியை நீங்கள் சட்னிக்கு பதில் அடிக்கடி வைத்து சாப்பிடலாம். இந்த பொடி தயாரிக்க, முதலில் முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலையை நிழலில் காய வைத்து விடுங்கள். இலைகள் உடையும் பதத்திற்கு வந்த பிறகு, அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், கருப்பு உளுந்து, வேர்க்கடலை, பாசிபயிறு, பாசிபருப்பு, கருப்பு எள், வெள்ளை எள், பாதாம், பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகிய பொருள்களை சிறிது எண்ணெய் ஊற்றி தனித்தனியாக வறுத்து பின் ஒன்றாக அரைத்து எடுத்து முருங்கை பொடியுடன் கலந்து விடுங்கள். இறுதியாக தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு டப்பாவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடி, ஒரு மாதம் ஆனாலும் கெடாது. இந்த பொடியை நீங்கள் சாதம், இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Read more: உங்கள் குழந்தைகள் Genius-ஆக இருக்க வேண்டுமா? அப்போ இந்த மீனை கண்டிப்பா கொடுங்க..