மன அழுத்தம் மற்றும் அதிகம் மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் வைட்டமின் பி12 குறைப்பாடு..! இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க.!
வைட்டமின் பி12 நரம்பு மண்டலம் எலும்புகள் மற்றும் இரத்தம் ஆகியவற்றின் ஆரோக்கியத்திலும் செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின், இறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் சார்ந்த உணவுகளில் அதிக அளவில் உள்ளது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்.
மயக்கம், தோல் வெளிறிய நிறத்தில் காணப்படுதல், மன அழுத்தம், தலைவலி, வாய் மற்றும் நாக்கில் ஏற்படும் புண்கள் ஆகியவை வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான அறிகுறிகள் ஆகும். வைட்டமின் பி12 குறைபாடு வயதானவர்கள் மற்றும் இரைப்பை மற்றும் குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடமும் அதிக அளவில் காணப்படும்.
இதனை சரி செய்வதற்கு இறைச்சி, முட்டை, மீன் மற்றும் பால் சார்ந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.. மேலும் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பதும் வைட்டமின் பி12 சத்தை நம் உடலில் அதிகரிக்கும். இவை தவிர வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் பயன்படுத்துவதும் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து விடுபடுவதற்கு சிறந்த வழியாகும். அதிகமாக மது அருந்துபவர்களுக்கும் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும்.
வைட்டமின் பி12 குறைபாடு மன அழுத்தத்தில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் அடுத்த நோயினால் பாதிக்கப்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். இந்த வைட்டமின் குறைபாட்டை நம்மால் கண்டுபிடிப்பது சிரமமான காரியம் என்பதால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார நல அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து அதற்கு தேவையான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது இந்த வைட்டமின் குறைபாட்டில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சிறந்த வழியாகும்.