கன்னி ராசிக்காரர்களே.. உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும் நிறங்கள் என்ன தெரியுமா?
ஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் பலர் இதனை நம்புகின்றார்கள். பொதுவாகவே ஒருவருடைய ராசிக்கும் அவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் நிறத்திற்கும் அதிக தொடர்பு காணப்படுகின்றது.அந்த வகையில் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்டம் மற்றும் துர்தர்ஷ்டம் தரக்கூடிய நிறங்களைப் பற்றி பார்ப்போம்.
அதிர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள்;
வெள்ளை நிறம் : கன்னி ராசிக்காரர்களுக்கு வெள்ளை நிறம் மிகவும் அதிர்ஷ்ட்டமானதாகும். இந்நிறம் அணிவதின் மூலம் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மனஅமைதியை அளிக்கிறது. இதனால் தெளிவான தீர்வெடுத்து வாழ்வில் முன்னேற வழிவகுக்கிறது.
நீல நிறம் : கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறங்களின் பட்டியலில் நீல நிறம் முக்கிய பங்கு அளிக்கிறது. கன்னி ராசியினர் நீல நிறத்தை அதிகமாக பயன்படுத்தும் போது இவர்களின் உற்பத்தி திறன் இயல்பாகவே அதிகரிக்கும். இதனால் தொழிலில் முன்னேற்றம் அடைந்து வாழ்க்கையின் தரத்தை உயர்த்துகிறது.
பச்சை நிறம் : கன்னி ராசியினருக்கு ஆற்றலை அதிகரிப்பதில் பச்சை நிறம் முக்கியத்துவம் பெருகிறது. பணத்தை ஈர்க்கும் அதிர்ஷ்டம் கொண்ட நிறங்களில் பச்சையும் ஒன்று, இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்தினால் வாழ்க்கையில் பணப்பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி செழிப்பாக இருக்கும்.
துர்தர்ஷ்டம் தரக்கூடிய நிறங்கள்;
சிகப்பு நிறம் : பொதுவாகவே, நாம் சிவப்பு நிறத்தை ஆபத்துடன் ஒப்பிடுவது வழக்கம். சிவப்பு நிறம் எதிர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்த கூடியது. குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நிறம் பாதகமான விளைவுகளை உண்டாக்கும்.
ஊதா நிறம் ; ஊதாநிறத்தை கன்னிராசியினர் மிகவும் தவிர்க்க வேண்டும்.என்னதான் இந்நிறம் அழகான தோற்றத்தைக் கொடுத்தாலும் அந்தளவுக்கு உங்களுக்கு குழப்பத்தை உண்டாக்கி இலக்கை அடைய தடையாய் அமையும்.
Read more ; என்னது கீர்த்தி சுரேஷிற்கு டிசம்பரில் திருமணமா? மாப்பிள்ளை யார் தெரியுமா?