For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சோழர் கால இரட்டை கற்கோயில்கள்.. ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரிய ஒளி விழும் அதிசயம்..!! வேலூரில் இப்படி ஒரு கோவிலா?

Melbadi Tabaskrithamppal Sametha Somanathiswarar Temple is situated on the western side of the Ponnai river Neeva. A thousand years old.
06:00 AM Nov 18, 2024 IST | Mari Thangam
சோழர் கால இரட்டை கற்கோயில்கள்   ஆண்டுக்கு இருமுறை மட்டுமே சூரிய ஒளி விழும் அதிசயம்     வேலூரில் இப்படி ஒரு கோவிலா
Advertisement

பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் வரலாறும், தனிச்சிறப்பும் ஒவ்வொரு முறை கேட்கும்போது நமக்கு அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட கோயில்கள் பல அதிசயங்களையும், மர்மங்களையும் உள்ளடக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி தற்போது வேலூரில் அமைந்துள்ள மர்ம கோயிலின் சிறப்பம்சங்களை குறித்து பார்க்கலாம்?

Advertisement

வேலூரில் வள்ளி மலை என்ற பகுதியில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்ப்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பொன்னை நதியான நீவா நதியில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயில் பராந்தக மன்னரால் கட்டப்பட்டு ராஜராஜ சோழரால் குடமுழுக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கோவில் அமைந்துள்ள மேல்பாடி கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் லாலா பேட்டையில் உள்ள மலையில் இருந்து கற்களை வெட்டி எடுத்து வந்து, பெண்ணை ஆற்றங்கறை ஓரம் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் பச்சை நிற கற்களால் ஆன கற்சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது. கோவிலின் சுவர்களில் ராஜராஜ சோழன் மற்றும் அவர் தந்தையான இரண்டாம் பராந்தக சோழனின் பெயர்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களும் காணப்படுகிறது. கோவில் மண்டபங்களை தாங்கி நிற்கும் தூண்களில் கலை நயமிக்க வடிவங்களும் சொருபங்களும் நேர்த்தியான முறையில் செதுக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் இருந்து 200அடி தொலைவில் தென் பக்கத்தில் ராஜராஜ சோழனின் பாட்டன் ஆரூர் துஞ்சிய தேவ சோழனின் கல்லறை கட்டப்பட்டுள்ளது. கிபி 1014ஆம் ஆண்டு ராஜராஜ சோழனின் தாய் வழி பாட்டனரான துஞ்சிய தேவன் போரில் மரணமடைந்தார். அவரின் நினைவாக சோமநாதீஸ்வரர் கோயிலில் எதிர்பக்கத்தில் அரிஞ்சிகை ஈஸ்வரன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக பழமையான இக்கோயிலின் சிவலிங்கத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே சூரிய ஒளி படும் என்பது இக்கோயிலின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயமாக கருதப்பட்டு வருகிறது. இதன்படி மார்ச் 21 முதல் 24 தேதிகளிலும் செப்டம்பர் 21 முதல் 24 தேதிகளிலும் காலை 6 முதல் 6.30 மணியளவில் மட்டுமே சிவலிங்கத்தில் சூரிய ஒளி  படுகிறது. இந்த நிகழ்வை பார்ப்பதற்காகவே பக்தர்கள் இக்கோயிலில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Read more ; கற்பழிக்கும் காட்சியை மட்டும் 4 மணி நேரம் எடுத்தார்கள், சத்யராஜ் குறித்து கஸ்தூரி கூறிய தகவல்..

Tags :
Advertisement