Viral Video | யாரு பெருசுன்னு அடிச்சு பார்க்கலாமா..? முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற மாணவிகள்...! பரபரப்பு வீடியோ..!!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகள் நல்ல முறையில் படித்து, எதிர்காலத்தில் தங்களை பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், தன்னைத்தானே அவர் பார்த்துக் கொள்வார் என நம்பி அவர்களை படிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அவர்களோ குரூப்பாக பிரிந்து அட்ராசிட்டி, அடவாடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள், இரண்டு குழுவாக பிறந்து முதலில் வாக்குவாதம் செய்து கொள்கின்றனர். அப்போது, திடீரென எதிர்தரப்பில் இருந்த மாணவி ஒருவர், கைகளை உயர்த்திப் பேச, அதற்கு பதில் ஒன்று வர என மோதல் சம்பவம் நடந்தது.
அடித்துக் கொண்ட மாணவிகள்...
ஒரு மாணவியை பிடித்து இழுத்த மற்றொரு மாணவி என கும்பலாக கீழே விழுந்து மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டனர். அதில், வாட்ட-சாட்டமாக இருந்த மாணவி, வேறொரு மாணவியின் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.
வீடியோவில் சண்டையிட்டுக் கொண்ட மாணவிகள் யார்? எந்த கல்லூரியை சேர்ந்தவர்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாக தெரியவரும் நிலையில், ரெட்டிட் மற்றும் முகநூல் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலாகி இருக்கிறது.
Read More : மூதாதையர்கள் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்ட தம்பதி..!! டிஎன்ஏ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி முடிவு..!!