தன்னிடம் பாசமாக பேசியவரை நம்பிய சிறுமி; காதல் பெயரில் வாலிபர் செய்த காரியம்..
சமீப காலமாக, பெண் குழந்தை முதல் பாட்டி வரை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக, பாலியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். பெண்கள் வெளியே சென்றால் பாதுகாப்பு இல்லை என்ற சூழ்நிலை மாறி, தற்போது பெண்களுக்கு வீட்டிலேயே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் நிலவுகிறது. தந்தையே தனது மகளை பலாத்காரம் செய்யும் பல செய்திகளை நாம் கேள்வி படுகிறோம். அந்த வகையில், தற்போது சிறுமி ஒருவருக்கு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துன்புருதபடுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோஸ்கோட் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள பள்ளி ஒன்றில், 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் சேத்தன் குமார் என்ற நபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, சேத்தன் சிறுமியிடம் ஆசையாக பேசி அவரை மயக்கி உள்ளார். மேலும், சேத்தன் சிறுமியை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில், சேத்தனின் செயல்பாடுகள் எல்லை மீறியுள்ளது. இதனால் பயந்துப்போன சிறுமி, நடந்த சம்பவத்தை குறித்து தனது தந்தையிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை, சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், போலீசார் சேத்தன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read more: சில்க் ஸ்மிதா தற்கொலைக் கடிதத்தில் எழுதி இருந்தது என்ன?