முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தினந்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்..!! தமிழ்நாடு அரசு உடனே இதை செய்ய வேண்டும்..!! விஜய் பரபரப்பு பதிவு..!!

Tamil Nadu Vetri Kazhagam leader Vijay has urged the government to create a separate website for complaints related to sexual crimes against women and girls.
11:35 AM Nov 25, 2024 IST | Chella
Advertisement

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ”சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தினசரி நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.

பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும்.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.
இதற்கு மதிப்பளித்து, தமிழ்நாடு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : இன்ஸ்டா காதலனுடன் 2-வது திருமணம்..!! தடையாக இருந்த 5 வயது குழந்தை..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!

Tags :
vijayதமிழக வெற்றிக் கழகம்பெண்கள்விஜய்
Advertisement
Next Article