For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நண்பனின் மனைவியுடன் அடிக்கடி உல்லாசம்.. உச்சத்திற்கு சென்ற தகாத உறவு.. இளைஞர் பரிதாப பலி..!!

Villupuram police have arrested 3 people in connection with the murder of a Theni youth.
01:29 PM Dec 01, 2024 IST | Mari Thangam
நண்பனின் மனைவியுடன் அடிக்கடி உல்லாசம்   உச்சத்திற்கு சென்ற தகாத உறவு   இளைஞர் பரிதாப பலி
Advertisement

விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தினர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் என 3 பேரை சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisement

கொலை செய்யப்பட்ட அரவிந்த், சென்னையில் உள்ள அப்பளம் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவருக்கும், விழுப்புரம் அருகே வெங்கந்தூரை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதையறிந்த அவர், அரவிந்தை பலமுறை கண்டித்துள்ளார். இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும் அரவிந்த் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அரவிந்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று அரவிந்தை அந்த நபர் தொடர்பு கொண்டு புதியதாக கார் வாங்கலாம் என்று கூறி அதற்காக மறைமலைநகர் பகுதிக்கு நேரில் வரும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அரவிந்தும் அங்கு சென்றுள்ளார்.

அப்போது அவரை 3 பேரும் சேர்ந்து மரக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயங்கிய நிலையில் இருந்த அரவிந்தை, அவர்கள் 3 பேரும் ஒரு காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு புறப்பட்டனர். விக்கிரவாண்டி அருகே வரும் போது அரவிந்த் இறந்துள்ளார். உடனே கொலையை மறைக்கும் நோக்கிலும், விபத்தில் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் வகையிலும் விழுப்புரம் விராட்டிக்குப்பம் புறவழிச்சாலையின் சர்வீஸ் சாலையோரமாக அரவிந்தின் உடலை வீசிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து, 3 பேரிடமும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; சிகாகோவில் கொல்லப்பட்ட தெலுங்கானா மாணவர்.. இந்திய துணைத் தூதரகம் கடும் கண்டனம்..!

Tags :
Advertisement