50 ரூபாய் கொடுத்து, சிறுமியுடன் உடலுறவு கொண்ட நபர்; வீட்டின் முன் விளையாடிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்.
மும்பையில், 13 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தன்னுடன் வந்தால் 50 ரூபாய் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமியும், அவருடன் சென்றுள்ளார். அப்போது அவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இங்கு நடந்ததை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு, சிறுமியின் கையில் 50 ரூபாயையும் கொடுத்துவிட்டு சென்றுள்ளார். தன்னை கொலை செய்து விடுவாரோ என்ற பயத்தில், சிறுமியும் தனக்கு நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சம்பவம் குறித்து மும்பை நகர காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read more: நடிகர் நேத்ரன் கடைசியாக வெளியிட்ட பதிவு!!! கண் கலங்கிய ரசிகர்கள்…