முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"இனி சூரியனுக்கு அழிவே இல்லை" செயற்கையாக சூரியனை உருவாக்கிய கிராம மக்கள்.! எங்கு தெரியுமா.?!

08:24 PM Jan 28, 2024 IST | 1newsnationuser5
Advertisement

இத்தாலி நாட்டில் விக்னலா என்ற கிராமம் உள்ளது. இங்கு 200 பேர் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் இத்தாலிக்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையில் உள்ளது. விக்னலா கிராமத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை சூரிய ஒளி அதிகமாக இருக்காது. அந்த நேரங்களில் உறையும் குளிர் விக்னலா கிராம மக்களை நடுங்க வைக்கும் அளவிற்கு பனி பொழிகிறது.

Advertisement

இதனால் இந்த கிராமமக்களும், அந்த நாட்டு அரசாங்கமும் முடிவு செய்து செயற்கையான சூரிய ஒளியை ஏற்படுத்த ஒரு கோடி வரை நிதி உதவி திரட்டி உள்ளது. பின்பு அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் 1.1 டன் எடையுடைய 1100 சதுர மீட்டர் உயரத்தில் மிகப்பெரும் கண்ணாடியை வைத்துள்ளனர்.

மேலும் இந்த கண்ணாடியை வைப்பதன் மூலம் மலையின் மேல்  விழும் சிறிய அளவு சூரிய ஒளி கண்ணாடியில் பட்டு எதிரொளித்து கிராமத்திற்கு வெப்பத்தை தரும். 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த செயற்கை சூரிய ஒளி மற்ற குளிர் நிறைந்த நாடுகளுக்கும் முன்னோடியாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
italysun lightvillage
Advertisement
Next Article