For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!! அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..!!

DMK candidate Aniyur Siva is leading in Vikravandi by-election vote count.
01:22 PM Jul 13, 2024 IST | Chella
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்     அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Advertisement

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகிக்கிறார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக, நாம் தமிழர் கட்சிகளை பின்னுக்கு தள்ளி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 83,431 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.

அவரை தொடர்ந்து பாமக வேட்பாளர் சி.அன்புமணி 36,241 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 6,814 வாக்குகளும் பெற்றுள்ளனர். அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், விக்கிரவாண்டி தொகுதி மற்றும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

Read More : Viral Video | ஆம்புலன்ஸ் இல்லாததால் சகோதரியின் உடலை தோளில் சுமந்து சென்ற சகோதரர்கள்..!! உ.பி.யில் அவலம்..!!

Tags :
Advertisement