விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை...! துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு...!
தமிழகத்தில் 1.16 கோடி மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்; பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து திட்டங்களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்டவை இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. முன்னோடி திட்டமான காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன.
தமிழகத்தில் 1.16 கோடி மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருகின்றனர். விடுபட்டவர்களில் தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இதையெல்லாம் பார்த்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது. எப்படியாவது திமுக கூட்டணி உடையாதா என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். திமுக தலைவர் ஸ்டாலின் 2-வது முறையாக முதல்வராவார் என கூறினார்.