ஆளுநர் தேநீர் விருந்து.. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பு..!!
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் வழங்கும் குடிநீர் விருந்தை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த அந்த நாளன்று அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு அந்தந்த மாநிலங்களின் ஆளுநர்கள் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் ரவி சென்னை கிண்டியிலுள்ள ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பதாக ஏற்கனவே காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில் முதல் முறையாக கட்சி தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கும் ஆளுநரை தேநீர் விருந்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்வாரா இல்லை புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்த நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தவெக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
Read more : இலங்கை கடற்படையின் தொடர் அராஜகம்!. 33 தமிழக மீனவர்களை சிறைபிடித்து அட்டூழியம்!