Vijayadharani:இரவோடு இரவாக பதவியை ராஜினாமா செய்தார் விஜயதாரணி!… விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல்!
Vijayadharani: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி விஜயதரணி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் விஜயதரணி இணைந்துள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மோசமான அனுபவத்தால் பாஜகவில் இணைந்துள்ளேன் என விஜயதரணி தெரிவித்துள்ளார். பாஜகவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் விஜயதரனி தெரிவித்திருந்தார்.
பாஜகவில் இணைந்ததையடுத்து, விஜயதாரணி காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் விஜயதாரணியின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்திருந்தது. இந்தநிலையில், விஜயதாரணி தாமாகவே எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனால், மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reaadmore:நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் ’நீயா நானா’ பிரபலம்..!! யார் இந்த சந்திர பிரபா..?