"அமிதாப் பச்சன், ரஜினிக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கின நடிகை நான் தான்..." பிரபல நடிகை பகிர்ந்த தகவல்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள் மட்டுமே ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த 90 கால கட்டத்தில், அதிரடி சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு சமமாக நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகை விஜயசாந்தி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உயர் போலீஸ் அதிகாரியாக விஜயசாந்தி நடித்து வெளியான விஜயசாந்தி ஐபிஎஸ் திரைப்படம், தமிழ்நாட்டிலும் வசூலில் சக்கை போடு போட்டது. அதைத் தொடர்ந்து விஜயசாந்தி நடிப்பில் பல படங்கள் உருவாகி தமிழில் வரவேற்பை பெற்றது. 80களில் வெளிவந்த சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர், தெலுங்கு சினிமாவில் நுழைந்து அதிரடி ஆக்ஷன் படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தெலுங்குத் திரைப்படங்களில் அதிரடி வேடங்களில் நடித்ததற்காக 'லேடி அமிதாப்' என்று பிரபலமானார் விஜயசாந்தி.
1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்ற இவர் பிலிம்பேர், ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது என பெற்றுள்ளார். இவர் தமிழில் நடித்த ஒரு முக்கியமான படம், பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான மன்னன். இந்த படத்தில் விஜயசாந்தி திமிர் பிடித்த பெண்ணாக நடித்திருப்பார். பலரின் மனம் கவர்ந்த மன்னன் திரைப்படத்தை குறித்து அவர் பேசும் போது, "'மன்னன்' படத்துல நான் நடிச்சப்போ ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினேன். இந்தியாவுல அதிக சம்பளம் வாங்கிய நடிகர்கள்ல அமிதாப் பச்சன் சார் முதலிடத்துலயும், ரஜினி சார் இரண்டாவது இடத்துலயும், நான் மூணாவது இடத்துலயும் இருந்தோம். அப்போ அதிக சம்பளம் வாங்கிய நடிகை நான்தான்." என்று கூறியுள்ளார்..
Read more: இயந்திரத்தில் சிக்கிய, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கை!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..