இனி திரையரங்கில், ரசிகர்களை பேட்டி எடுக்க கூடாது!!! தயாரிப்பாளர் சங்கத்தினரின் பரபரப்பு கடிதம்...
பொதுவாக ஒரு திரைப்படம் வெளியானதும், திரையரங்கு வளாகத்தில் கையில் மைக்குடன் சிலர் நிற்பது உண்டு. அவர்கள் படம் முடிந்து வெளியே வரும் மக்களிடம் படம் எப்படி இருந்தது என்ற கேள்வியை கேட்டு அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை தங்களின் யூடியூப் சேனல்களில் பதிவிடுவது உண்டு. இந்த Review வீடியோவை பார்த்து தான் அந்த படத்திற்கு போக வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்வது உண்டு. இந்த ஒரு படம் அதிக நாள் ஓடுவது இந்த Review வீடியோவை பொறுத்து தான் பெரும்பாலும் அமையும். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள பிரபல திரையரங்குகளின் வளாகங்களில் திரைப்படங்கள் வெளியாகும் முதல் நாளில் ரசிகர்களை யூடியூப் சேனல்கள் பேட்டி எடுக்க தடை விதிக்க கோரி திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: “2024ஆம் ஆண்டில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு யூடியூப் சேனல்களில் வெளியான மக்கள் பேட்டி, (Public Review/Talk) பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த யூடியூப் சேனல்களும் எடுக்க தடை செய்து, இந்த முதல் காட்சி மக்கள் விமர்சனம் (FDFS Public Review/Talk) நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்" என குறிப்பிட்டிருந்தது.
Read more: “என்னோட பொண்ணு பண்ண இந்த காரியத்த என்னால ஜீரணிக்க முடியல”; பாக்கியாஜ் பகிர்ந்த தகவல்..