Vijay TVK | 2026 முதல்வர் பதவி உறுதி..? நடிகர் விஜய் கட்சிக்கு அரசியல் ஆலோசகராகும் பிரஷாந்த் கிஷோர்..!!
Vijay TVK | கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுகவுக்காக வியூகங்களை வகுக்க பிரஷாந்த் கிஷோரின் ஐ பேக் குழு ஒப்பந்தம் செய்யப்பட்டது. திமுகவுக்கான தேர்தல் பணிகளை பிரஷாந்த் கிஷோரின் குழுதான் கவனித்தது. பஞ்சாப், டெல்லி, ஆந்திரப்பிரதேசம் என்று பல மாநிலங்களில் ஆளும் கட்சிகளின் வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர் முக்கிய காரணமாக இருந்தார். இவரை திமுகவும் இந்த தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்தது.
முன்னதாக சட்டசபை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோரை அணுகியதாக கூறப்பட்டது. ஆனால், இதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால், திமுக இவருடன் ஒப்பந்தம் செய்தார் என்றெல்லாம் செய்திகளை வெளியாகின. இந்நிலையில் தான், நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டியை அமைப்பது, லோக்சபா தேர்தலில் களமிறங்குவது தொடர்பாக ஆலோசனைகளை செய்ய விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக சீக்ரெட் மீட்டிங் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ”விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால், அவர் உதவி கேட்டால் செய்வேன். அவருக்கான ஆலோசனைகளை வழங்குவேன். ஆனால், முழு நேரமாக அவருடன் வேலை பார்க்க மாட்டேன்” என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
Read More : BJP Annamalai | திமுக – அதிமுகவை ஓரங்கட்டிய பாஜக..!! அண்ணாமலையின் புதிய வியூகத்தால் முதலிடம்..!!