லோக்சபா தேர்தலை டார்கெட் செய்யும் Vijay..!! கிட்டத்தட்ட நெருங்கியாச்சு..!! பிரம்மாண்ட மாநாடு எப்போது..?
Vijay | நடிகர் விஜய் இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ள விஜய், 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சி அறிவிப்புடன் நிற்காமல் அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாக உள்ளது.
அதாவது வரும் ஏப்ரல் மாதம் மதுரையில் முதல் மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் தான் நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், கிட்டதட்ட அதே காலகட்டத்தில் தான் விஜய்யும் இந்த மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வியக்கும் வகையில் இந்த மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
அதேநேரம் மாநாட்டிற்கு முன்பு கட்சியில் சில அடிப்படை விஷயங்களைச் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுவாக கட்சிகள் நிர்வாக ரீதியில் தங்களுக்கென தனியாக மாநிலத்தில் மாவட்டங்களைப் பிரிக்கும். அதன்படி, மாவட்டச் செயலாளர்கள் முதல் அனைத்து வகையான நிர்வாகிகளும் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, திமுகவில் 70 மாவட்டங்களும், அதிமுகவில் 82 மாவட்டங்களும் நிர்வாக வசதிக்காக வைத்துள்ளனர். இந்த இரு கட்சிகளை மிஞ்சும் வகையில் தமிழ்நாடு முழுக்க 100 கட்சி மாவட்டங்களை உருவாக்கத் தமிழக வெற்றிக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்த அத்தனை மாவட்டங்களுக்குமான பொறுப்பாளர்களை நியமித்த பிறகு கட்சியின் மாநாட்டை மதுரையில் பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும், பொறுப்பாளரை நியமிப்பதிலும் புதிய வழியை விஜய் பின்பற்ற உள்ளார். அதாவது, விஜய் மக்கள் மன்றத்தில் இருப்பதால் மட்டும் பொறுப்புகள் வழங்கப்படாது. மாறாக எந்த நிர்வாகி அதிக உறுப்பினரைக் கட்சியில் சேர்கிறாரோ அவருக்கே தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பு வழங்கப்படுமாம். மாநிலம் முழுக்க 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் இலக்கை நிர்ணயம் செய்துள்ள நிலையில், பொறுப்பாளர்கள் நியமனத்தில் இந்த புதிய வழியைப் பின்பற்ற விஜய் முடிவு செய்துள்ளார்.
கட்சி உறுப்பினர் சேர்க்கைக்காகத் தனியாகச் செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், அதை விஜய் அடுத்த வாரம் அறிமுகம் செய்ய உள்ளார். ஒவ்வொரு நிர்வாகிக்கும் பிரத்தியேக எண் தரப்பட்டுள்ள நிலையில், அதை வைத்தே புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டுமாம். அந்த பிரத்தியேக எண்ணை வைத்தே ஒரு நிர்வாகி எத்தனை பேரைக் கட்சியில் சேர்த்துள்ளார் என்பது கண்டறியப்படும். அதன்படியே அவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்படும். கட்சியில் இந்த பொறுப்பாளர்களை நியமித்த பிறகு ஏப்ரலில் மிகப் பெரிய மாநாட்டை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
English Summary : Tamizhaga vetri kazhagam
Read More : ரூ.1000 உரிமைத்தொகையில் அதிரடி மாற்றம்..!! தேர்தலையொட்டி மாஸ் காட்டும் DMK அரசு..!!