தவெக-வின் 2-வது மாநாட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விஜய்..? என்ன செய்யப்போகிறார் தெரியுமா..?
தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கட்சிக் கொடி ஏற்றுவதில் புதுமையை புகுத்தியிருந்த விஜய், கட்சியின் கொள்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தவெக கட்சியின் கொள்கை வழிகாட்டிகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அவர் கடந்த 2024ஆம் ஆண்டு நடத்திய மாநாடு தற்போது வரை பேசு பொருளாக உள்ளது. மேலும், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்று பேசியதும் பேசு பொருளாக மாறியது. விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகம் உள்ளதால், அடுத்தக்கட்ட அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகிறார். முதல் மாநாடு விழுப்புரத்தில் நடந்து முடிந்த நிலையில், 2-வது மாநாட்டை வி என்ற எழுத்துள்ள நகரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளார். முதல் மாநாட்டில் விஜய்யின் தாய், தந்தை பங்கேற்ற நிலையில், மனைவி சங்கீதா பங்கேற்காமல் இருந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ஆனால், இரண்டாவது மாநாட்டில் மனைவி சங்கீதா மற்றும் குடும்பத்தினரை பங்கேற்க வைத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க விஜய் முடிவு செய்துள்ளார். முதல் மாநாட்டின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், இரண்டாவது மாநாட்டை நடத்த விஜய் முடிவு செய்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை உண்டாக்கியுள்ளது.
Read More : அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்..!! பாமக போராட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீஸ்..!! தடையை மீறி நடத்தப்படுகிறதா..?